Header Ads



முஸ்லிம் லீக் கட்சி நடத்திய கீதாவின் திருமணம்...


மலப்புறம் மாவட்டத்தில் வேங்கரவில் இயங்கும் ""ரோஸ் மனார்"" அநாதை இல்லத்தில் சிறுமியாக வந்து சேர்ந்தவர் கீதா.. அங்கேயே தங்கி படித்து வளர்ந்த கீதா தற்போது திருமண வயதை எட்டியுள்ளார்.


ரோஸ் மனார் அநாதை இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு அடிக்கடி உணவு வழங்குவது அங்குள்ள முஸ்லிம் லீக் கட்சியினர் வழக்கம்..


அந்த அநாதை இல்லத்தின் மேலாளர் கீதாவின் விஷயத்தை முஸ்லிம் லீக் கட்சி பொறுப்பாளர்களிடம் கூற அவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர்.


கீதாவுக்கு பொருத்தமான மணமகனை முஸ்லிம் லீக் சேர்ந்தவர்கள் தேட பக்கத்து ஊரைச் சேர்ந்த விஷ்ணு என்பவருடன் நிச்சயமான திருமணம் இன்று காலை நடந்தது..


முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் பெயரில் தயாரான அழைப்பிதழ் ஊர் முழுவதும் விநியோகம் செய்ய ஜமாஅத் மக்கள் அனைவரும் உதவியதோடு நேரில் கலந்து மணமக்களை வாழ்த்தினர்..


அம்மாஞ்சேரி காவு பகவதி அம்மன் கோயிலில் வைத்து திருமணம் நடத்த கோவில் நிர்வாகமும் அனுமதி வழங்க கேரள மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பாணக்காடு சாதிக் அலி ஷிஹாப் தங்கள் தலைமையேற்ற திருமணம் புரோகிதர்களால் நடத்தி வைக்கப்பட்டது.


முஸ்லிம் லீக் மூத்த தலைவரும் வேங்கர தொகுதி எம்எல்ஏவுமான குஞ்ஞாலிக்குட்டி மற்றும் நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினர்..


கட்சி,ஜாதி அரசியல் கடந்து பகவதி அம்மன் கோயில் முற்றத்தில் ஒன்று சேர்ந்த அனைவருக்கும் முஸ்லிம் லீக் இளைஞரணி சார்பில் அறுசுவை சைவ உணவும் பரிமாறப்பட்டது...

Colachel Azheem

No comments

Powered by Blogger.