மத்திய வங்கி ஆளுநர், அடித்துக் கூறும் தகவல்
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“புதிய மத்திய வங்கிச் சட்டம் இறுதியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்போது அது சட்டமாகியுள்ளது.
உள்நாட்டு விலை ஸ்திரத்தன்மை மற்றும் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு எமக்கு அதிக சுதந்திரத்தையும் வலுவான பொறுப்புக்கூறலையும் வழங்கியுள்ளது.
நிதிக் கொள்கைக்கும் பணவியல் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு குறித்து குழப்பம் நிலவியது.
நாட்டின் நிதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என சிலர் நாடாளுமன்றத்தில் கூறுவதை கேட்டேன். அவர்கள் பொது மக்களின் நிதி அதிகாரத்தைப் பற்றி பேசுகிறார்கள். நாட்டின் நிதிக் கொள்கை பற்றி அல்ல.
தற்போது புதிய கட்டமைப்பை பெற்றுள்ளோம். இந்த மாத இறுதிக்குள் ஒற்றை இலக்க பணவீக்கத்தை எட்டுவதற்கான பாதையில் இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment