Header Ads



நீங்கள் ஒரு முஸ்லிம் தானே...?


நான் போர்த்துக்கல்லில் பிறந்தவள். தற்போது லக்ஸம்பேர்கில் வசித்து வருகிறேன். நான் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவிக் கொண்டவள்.  


முஸ்லிம் என்ற சொல் என் காதுகளில் எப்போதாவது விழும்போது அது குறித்து நான் எந்தக் கவனமும் செலுத்தியது கிடையாது. ஆனால் அந்தச் சொல் எனக்குள் ஆழ நுழைந்த சந்தர்ப்பத்தை நான் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படக் கூடும்.


நான் ஹிந்திப் படங்கள் பார்ப்பதுண்டு. எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஷாருக் கான். உண்மையை மனந்திறந்து சொல்ல வேண்டுமானால் அவ்வகையில் உலகத்தில் வாழும் எனக்கு மிகவும் பிடித்த மனிதராக அவர் இருந்தார். எதிர்பாராத விதமாக அவரது நேர்காணல் ஒன்றைக் காண நேர்ந்த போது நேர்காணல் செய்தவர் அவரிடம் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்து, 


'நீங்கள் ஒரு முஸ்லிம் தானே?' என்று கேட் அவர், 'ஆம். நான் ஒரு முஸ்லிம்!' என்றார். இதுதான் இஸ்லாம் என்ற ஒரு சமயம் குறித்து நான் தெரிந்து கொண்ட முதல் சந்தர்ப்பம். 


பிறகு நான் லக்ஸம்பேர்க் வந்த போது வௌ;வேறு நாடுகளிலிருந்து அகதிகள் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் தலையை மூடியிருந்த பல பெண்களை நான் கண்டேன். அவர்கள் இஸ்லாத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டேன்.  


எனக்குக் கணவராக வாய்த்தவர் ஒரு முஸ்லிம். அவரிடம் கேட்டுப் பல விடயங்களைத் தெரிந்து கொண்டேன். எனது சந்தேகங்களை அவர் தீர்த்து வைத்தார். அதன் பிறகு நான் ஷஹாதா சொல்லி இஸ்லாத்தில் இணைந்தேன்.


(Ashroff Shihabdeen)



No comments

Powered by Blogger.