Header Ads



இறுதிவரை போராடிய சாரதி


உமா ஓயா திட்ட அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எல்ல - வெல்லவாய வீதியில் கரதகொல்ல உமா ஓயா திட்ட அலுவலகத்திற்கு அருகில் இன்று (18) காலை பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.


விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பயணிகள் காயமடைந்து வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இன்று காலை 7.15 மணியளவில் பேருந்து  பயணிக்க ஆரம்பித்ததாகவும், அதிவேகமாக சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாகவும் அதில் பயணித்த இளைஞர் ஒருவர் “அத தெரண”விடம் தெரிவித்தார்.


“நானும் பேருந்தில் வந்தேன், பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்தது, எங்களைக் காப்பாற்ற சாரதி எவ்வளவோ முயன்றார். எல்​லோரும் கியரை மாற்றச் சொன்னோம்.  வேகத்தினால் அது முடியாமல் போனது. பின்னர் சாரதி திடீரென மலையின் பக்கம் பேருந்தை திருப்பிய நிலையில், அது கவிழ்ந்தது. பேருந்தில் சுமார் 10 பேர் இருந்தோம். நானும் மேலும் ஒருவரும் மட்டுமே சுய நினைவில் இருந்தோம். ஏனையவர்களை வேறொரு வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்குக் கொண்டு வந்தோம். அதன் பிறகு, சாரதி மாமா இறந்து விட்டார் என தெரியவந்தது.

No comments

Powered by Blogger.