Header Ads



கிழக்கு ஆளுநரின் சர்வதேச விவகார இணைப்பாளராக A.L.M. லாபீர் நியமனம்


கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமான் அவர்களின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளராக A.L.M.லப்பீர் இன்று(8) நியமிக்கப்பட்டுள்ளார்.


A.L.M.லப்பீர் இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு தாய்லாந்து,கனடா,சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார். இறுதியாக அவர்  ஜோர்தான் நாட்டில் இலங்கைக்கைகான தூதுவராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

1 comment:

  1. ​பொருத்தமான பதவி பொருத்தமான ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி அவர் பெரிய பாத்திரத்தைச் சுமந்து கொண்டு சவூதி அரேபியா, கனடா, ஜோர்டான் போன்ற தனக்குப் அதிகார ரீதியில் நன்கு பரிச்சியமான நாடுகளுக்குச் சென்று பிச்சைப் பாத்திரத்தை நீட்டுவது தான் குறை, பாத்திரம் நிரம்பி வழியும். அந்த இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான டொலர்கள், ரியால்களைக் கொண்டு வந்தால் கிழக்கு மாகாணத்தைச் சுவனபுரியாக மாற்றி விடலாம். அந்த கிழக்கு மாகாணத்து மக்களின் அனைத்துப் பொருளாதாரப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும். அபிவிருத்தி, முன்னேற்றம் என்றால் என்ன என்பது பற்றி எந்தவிதமான சிந்தனைகளும் கருத்துகளும் புரியாத விளங்காத இந்தக் கூட்டங்களுக்கு மனித பாவனைக்கு உதவாத மந்தைக்கூட்டம் எனக்கூறுவதைத் தவிர வேறு எந்த வார்த்தைகளும் எமக்கு இல்லை. பெரிய பதவி வகிப்பவர் மேற்கு நாடுகளுக்கு அவர்களின் அழைப்பு எனக்கூறிக் கொண்டு பாத்திரத்தை நீட்டினார். ஆனால் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள ஆகியும் பாத்திரம் இன்னும் காலியாக இருக்கின்றது. கடைசியாக இந்தியா போக இருக்கின்றார். அங்கு நிச்சியம் பாத்திரத்துக்குப் பதிலாக தமிழர்களை ஏமாற்றும் அவருடைய கண்கட்டி வித்தைகளுக்கு சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டு வெறும் பாத்திரத்தை, சாக்கில் போட்டுக் கொண்டு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இனி தேர்தல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற பாடலையும் கொஞ்சம் நாட்கள் பாடி மறுபடியும் பொதுமக்களை ஏமாற்றும் சூழ்ச்சியில் அடுத்த திரை மறைவு நடவடிக்ைககளைத் தொடர அவருடைய சூழ்ச்சிகளும் தொடரும். இந்த நாட்டில் பெரும்பான்மையான வக்கில்லாத மந்தைக்கூட்டம் இருக்கும் வரை அவருடைய திருகுதாளங்களைச் சரியாகக் கொண்டு செல்லலாம். ஆனால் வௌிநாடுகள் இந்த நாடகங்களைப் பார்த்து தொடர்ந்தும் கேளியும் பகிடியும் பண்ணிக் கொண்டே இருக்கின்றன. இந்த மந்தைக்கூட்டம் பிச்சைப் பாத்திரத்துடன் உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றது. அந்த டைகோர்ட் ஆசாமி பிச்சைப் பாத்திரத்துடன் சவூதி சென்று பின்புறம் உதை மாத்திரம் கிடைக்காமல் பாத்திரத்துடன் திரும்பி ஒடிவந்ததாக பரவலாகப் பேசப்படுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.