Header Ads



8 வருடங்களாக 9 தங்கப் பதக்கத்தினை தனதாக்கிய பாலுராஜ்


கொழும்பு - சுகததாச உள்ளரங்கில் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் கல்முனையைச் சேர்ந்த எஸ்.பாலுராஜ் என்ற வீரர் தங்கப்பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டார்.


கல்முனை- சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.பாலுராஜ், 2012 ஆம் ஆண்டு முதல் (2020-2023) ஆண்டுகள் வரை நடைபெற்ற தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்து வருகிறார்.


அதன்படி, இவ்வருடமும் (2023) கொழும்பு சுகததாசவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.


தொடர்ச்சியான முறையில் 8 வருடங்களாக ஒன்பது பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளார்.


மூன்று தடவைகள் best player எனும் பட்டத்தினையும் சுவீகரித்துள்ளார். இதன்மூலம் கராத்தே பிரிவில் கிழக்கு மாகாணத்தின் பெயரை முதலிடத்தில் தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.