Header Ads



யானைக்கு 7 தலைவர்களா..? தமிழ் பேசும் மக்களுக்கு இடமில்லையா..??


ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் மாநாடு ஒன்றை நடத்தி கட்சிக்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த அரசியலமைப்பின் கீழ், கட்சியின் பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் குறைக்கப்படும் எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிகொத்தே அன்றாட நிர்வாக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரவிக்கு பொதுச் செயலாளர் பதவி மற்றும் பரந்த அதிகாரங்களை வழங்க ரணில் தயாராக இருந்த போதிலும், ஜனாதிபதியின் நெருங்கிய சகா ஒருவரின் அழுத்தம் காரணமாகவே ரணில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதன்படி தற்போதுள்ள ஒரு துணைத்தலைவர் பதவிக்கு பதிலாக ஏழு அல்லது எட்டு துணைத்தலைவர் பட்டங்கள் உருவாக்கப்பட்டு இந்த ஏழு அல்லது எட்டு தலைவர்களுக்கே கட்சியின் அனைத்து அமைப்பு செயல்பாடுகளும் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தலைமைக் குழுவிற்கு பிஏசி (அரசியல் நடவடிக்கை குழு) என பெயரிடப்பட்டு ருவன், அகிலா, ரவி, சாகல, வஜிர, ஹரின், மனுஷ மற்றும் பாலித ஆகியோரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ஒரே அந்தஸ்து அதிகாரங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .


 

1 comment:

  1. இலங்கையில் மிக முக்கிய பிரதான கட்சியான ஐதேகட்சியை பாதுகாக்க இந்த 7 பேர் நிரலில் யாரும் பொருத்தமானவர்களாகத் தெரியவில்லை. இறுதியில் இந்த கட்சி அழிந்து போக வருவது மற்றொரு இனத் துவேசக் கட்சி என்பது தான் உண்மை. ஏற்கனவே குட்டிச் சுவரான இந்த நாட்டை அழித்து முடிப்பது மாத்திரம்தான் எஞ்சியிருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.