3 இலங்கைப் பெண்களினால், ஜப்பானுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
ஜப்பானிய தடுப்புக்காவல் நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் மரணம் தொடர்பில் அவரது சகோதரிகள் ஜப்பான் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி என்ற இலங்கைப் பெண் 2021 ஆம் ஆண்டு மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்ததாக டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்திருந்தது.
2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பான் சென்ற விஷ்மா சந்தமாலி, விசாவைக் காலம் முடிந்தும், ஜப்பானில் தங்கியிருந்தமைக்காக, 2021 ஜனவரி முதல், தடுத்து வைக்கப்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 6 ஆம் திகதியன்று உயிரிழந்திருந்தார்.
2021 ஆகஸ்ட் மாதம் வெளியான விசாரணை அறிக்கையில், தொடர்புடைய தடுப்பு முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வு இருப்பதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு இருப்பினும், விஷ்மா மரணத்திற்கு காரணமானவர்கள் என கூறி 13 ஊழியர்கள் மீது வழக்கு பதிய சட்டத்தரணிகள் மறுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஷ்மாவின் சகோதரிகள் வயோமி மற்றும் பூர்ணிமாவினால் ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த இலங்கை பெண் விஷ்மாவுக்கு முறையான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்க தவறியதாகவும் அதில் குற்றம்சாட்டியுள்ளனர். Twin
இது மிகவும் காத்திரமான ஒரு முயற்சி, இதனை அரசாங்கம் இலங்கைத் தூதுவராலயத்தின் ஊடாக வழக்கொன்றைப் பதிவு செய்திருந்தால் நிச்சியம் அவர்களுக்கு நல்லதொரு நட்டஈடு கிடைத்திருக்கும். இலங்கைத் தூதுவரலாயங்களில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள் உறவினர்களும், அடிவருடிகளும்தான். எத்தகைய அடிப்படை கல்வித்தகைமைகளும் இன்றி வெறுமனே அரசியல்வாதிகளின் உந்துதல்களால் அங்கு செல்லும் எருமைகளுக்கு உண்ணவும் மது அல்லது மூத்திரம் குடிக்கவும் நாள் முழுக்க ஜொலி பண்ணவும் அன்றி எந்த வேலைகளையும் உறுப்படியாகச் செய்யத் தெரியாமை எமது தூதுவராலங்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் துர்ப்பாக்கிய நிலையாகும்.
ReplyDelete