Header Ads



இன்றிரவு தடை நீக்கப்படவுள்ள 328 பொருட்கள்



இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


இதன்மூலம் மேலும் 328 பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், இன்று இரவு (20.07.2023) வெளியிடப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


மேலும் 300 அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கடந்த வாரம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இது அரசாங்கத்தால் கொள்கையடிப்படையில் நிதிஅமைச்சு மூலமாக வழமையாக அறிவிக்கப்படும். இது போன்ற செய்திகளை வௌியிட ஏன் இந்த மகோடிஸ்களின் படத்தைப் பிரசுரிக்கின்றீர்கள் என்பது தெரியவில்லை இது போன்ற பாவிகளைப் பார்த்து எமது இறைநம்பிக்கை குறையுமோ என்ற அச்சமும் எமக்கு ஏற்படுகின்றது. இந்த மகோடிஸ்களை நியமித்த பொதுமக்கள் தற்போது வெறுப்புடன் இந்த மூதேவிகள் எப்போது தொலைவான்கள் என எதிர்பார்த்து நிற்கும் போது அந்த சைத்தான்களுடைய படங்களைப் பார்க்கும் போது இன்னும் வெறுப்பும் எரிச்சலும்தான் வருகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.