தலைகள் மோதியதில் 2 சிறுவர்கள் மரணம்
கால்வாயில் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர், மரணமடைந்த சம்பவம், ஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியில் சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.
கால்வாய்க்கு அருகில் இருந்த மரமொன்றில் ஏறி, கால்வாய்க்குள் குதித்துக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 12 மற்றும் 15 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவரே மரணமடைந்துள்ளனர்.
மரத்திலிருந்து அவ்விருவரும் ஒரே நேரத்தில் பாய்ந்த போது, இருவரின் தலைகளும் மோதியதில், கால்வாய்க்குள் விழுந்து மீண்டெழ முடியாத நிலையில் அவ்விருவரும் மரணமடைந்துள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment