Sri Lanka Muslim Community - Italy இன் பொதுக்கூட்டமும், புதிய நிருவாக உறுப்பினர்கள் தெரிவும்
இந்நிகழ்வில் SLMC செயற்குழு அங்கத்தவர்கள் , பிரதிநிதிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என இத்தாலியின் பல பாகங்களிலும் இருந்தும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வானது வரவேற்புரை, மற்றும் தலைவர் RIYAS ZAWAHIR அவர்களின் உரை ஆகியவற்றுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்ற கூட்டறிக்கை செயலாளர் சகோதர்ர் Minhaj Shaheed அவர்களால் வாசிக்கப்பட்டது. அது சபையோர் முன் பிரேரிக்கப்பட்டு பின் அங்கீகாரம் பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து SLMC அமைப்பின் யாப்பின் பிரகாரம் இரண்டு வருட நிறைவினைத் தொடர்ந்து முன்னைய நிருவாகக் குழு கலைக்கப்பட்டு, தற்காலிக தலைவராக மதிப்பிற்குரிய மீரா முஹ்யித்தீன் சமூன் தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள்,அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்களின் ஏக மனதான தீர்மானத்துடன் மீண்டுமொருமுறை முன்னால் தலைவர் மதிப்பிற்குரிய சகோதர் RIYAS ZAWAHIR அவர்கள் SLMC அமைப்பின் புதிய நிருவாகத் தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன், உப தலைவராக TUWAN RAMZAN LANTRA அவர்களும் செயலாளராக மதிப்பிற்குரிய சகோதர் SAFWAN SIDEEQ அவர்களும், உதவி செயலாளராக மதிப்பிற்குரிய சகோதர் HANEEFA YAZEER அவர்களும் பொருளாளராக Aslam mansoor அவர்களும் உதவ பொருளாரக Nilushan Ahamed அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அதே போன்று அமைப்பின் உத்தியோகபூர்வ உறுப்பினர்களாக பின்வரும் நபர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
1.NAALIR NIYAS
2.NAZRUR RAHMAN A.R
3.NAJAB MOHAMMED
4.NASMEER SHAHUL HAMEE
5.SHIYAM ABDUL HAMEED
இத்தாலி இலங்கை அமைப்பின் இவ்வருட செயற்பாடுகள், இவ்வமைப்பு எதிர்நோக்கும் சவால்கள் என்பன பற்றிய பொதுமக்களது கருத்துக்கள் பகிரப்பட்டதுடன் அதன் செயற்றிட்டங்களின் எதிர்கால போக்கு பற்றிய கலந்துரையாடலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்றது. SLMC அமைப்பானது இத்தாலியின் MILAN நகரை மையமாக வைத்து இயங்கினாலும் இம்முறை
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட நிர்வாக குழுவில் இத்தாலியின் இதர நகரங்களிலும் இருந்தும் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்
இறுதியாக இனிவரும் காலங்களிலும் SLMC அதன் அங்கத்தவர்களின் ஆதரவுடனும், இறை உதவியுடனும் நல்ல பல செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இனிதே மாலை 5 மணியளவில் இந்த அமர்வு நிறைவு பெற்றது.
தகவல் : SLMC


Post a Comment