Header Ads



நிறை வேறாமல் போன ஆசை

தான் விமானியாக இருப்பதற்கு ஆசைப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் இன்று -23-  தெரிவித்துள்ளார்.


விமானியாக பறப்பது மன அழுத்தத்தை தரக்கூடியது என்றும், எனினும், தான் அதை விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா எயார்லையின் தொடர்பில் பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,


“ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறை இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 330 விமானிகள் தேவைப்படுவதாகவும் ஆனால் 260 விமானிகள் மாத்திரமே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இருந்து பல விமானிகள் வெளியேறியுள்ளதாகவும், மேலும் பலர் விரைவில் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரேமதாச தெரிவித்தார்.


இந்நிலையில், விமானிகள் பற்றாக்குறையால் மீதமுள்ள விமானிகள் சர்வதேச விதிமுறைகளை மீற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.


எஞ்சியுள்ள விமானிகள் ஓய்வு எடுக்காமல் சர்வதேச விதிமுறைகளை மீறி பறக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.