Header Ads



பாதிக்கப்பட்ட மாணவர் நுசைப்பின் குடும்பமும், கல்விப் பின்னணியும் - குதர்க்கமான கருத்துக்களை நிறுத்துங்கள்


கிழக்கு பல்கலைக் கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் நுசைப் அவர்களின் தந்தை (சம்மாந்துறை) ஓர் உயர்தர கணிதப்பாட ஆசிரியர் (ISA), தாயார் (அக்கரைப்பற்று) ஓர் வைத்தியர், ஒரு சகோதரர் வைத்தியர், மற்றய சகோதரர் பொறியியலாளர். இவ்வாறான ஓர் கல்விப் பின்னணியினை கொண்ட நடுத்தர குடும்பம். 


நடந்த பிரட்சினை என்ன..? 


கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின்  பீடாதிபதி கலாநிதி சதானந்தன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனூசா நமச்சிவாயம் ஆகிய இருவரும் இம்மாணவன் தாடி வைத்திருப்பதனைக் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர். 


சென்ற மே மாதம் 31ம் திகதி பரீட்சை எழுதச் சென்ற இம்மாணவன் தாடியுடன் பரீட்சை எழுத முடியாது என்று சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனூசா நமச்சிவாய திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். இதனால் குறிப்பிட்ட பாடத்தினை அவரால் எழுத முடியாமல் போயுள்ளது.


இவருடைய கற்கைநெறி தொடர்பில்


இவருடைய கற்கை "தாதியர் தொழிற் கற்கை" இல்லை.


இவருடைய கற்கை "Bsc nursing" இது ஒரு தாதிய தொழிற் கற்கை அல்ல. B.Com / BA, / LLB / Bsc போல ஒரு பட்டப் படிப்புதான் இது.


இதற்கு முன்னர் Bsc Nursing முடித்த யாரும் "தாதிய" நியமனம் பெறவுமில்லை. ஒரு பல்கலைக்கழக பட்டம் முடித்தவர்கள் சாதாரணமாக பெறும் ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்ற தொழில்களிலேயே உள்ளனர்..


Bsc_nursing பட்டப்படிப்பிற்கு ஏதாவது "ஒழுக்க நெறிமுறைக் கோவை" உள்ளதா..? 


ஆசிரியர் தொழிலுக்காக ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நோக்கில், ஆசிரியர் கல்விக் கல்லூரிகள் உள்ளது போல, தாதியர் தொழிலுக்காக தாதியர்களை பயிற்றுவிப்பதற்காக தாதியர் கல்விக் கல்லூரிகள் காணப்படுகிறது.


இவ் இரு கல்லூரிகளிலும் வழங்கப்படுவது டிப்ளோமா சான்றிதழே தவிர, இது ஒரு பட்டப்படிப்பல்ல. இவ்விரு கல்விக் கல்லூரிகளிலும் மாணவர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் போதே குறித்த கற்கை நெறியின் "ஒழுக்க விழுமியக் கோவை" நிபந்தனையாக முன்வைக்கப்படும். குறித்த நிபந்தனைக்கு உடன்பாடானவர்களே இணைந்து கற்க முடியும். ஆனால் பட்டப்படிப்பிற்கு இவ்வாறு இல்லை. 


இது தொடர்பில் குதர்க்கமான கருத்துக்களை பதிவிடும் மகா உத்தமர்கள் நன்கு ஆராய்ந்து கருத்துக்களை பகிரவும்.


Bsc nursing கற்கை நெறியினை தொடரும் மாணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் உள்ள "ஒழுக்க விழுமியக் கோவையினை" காட்சிப்படுத்த முடியுமா..?


முடிவாக.. 


பல்லின சமூகம் வாழும் நாட்டில் தமது கலாச்சார விழுமியங்களை சுதந்திரமாக பின்பற்ற முடியாத போதே முரண்பாடுகள் எழுகிறது...


Dr. ஷாபியில் தொடங்கி, சண்முகா வரை இனவாதம் சென்று இன்று கிழக்குப் பல்கலை கழகத்திலும் துவக்கப்பட்டுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது அவ்வளவு ஆரோக்யமானதல்ல. 


எவ்வளவுதான் அனுபவப்பட்டாலும் படிப்பினை வரவில்லை என்றால், எதிர்காலத்தில் எவ்வாறு அரசியல் ரீதியாக இரண்டு சமூகமும் இணங்கி நடப்பது...?


நிலைப்பாடு..


தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் மாணவனுக்கு எதிராக இருந்தாலும் தவறுதான்.. 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு முஸ்லிம் மாணவனுக்கு எதிராக இருந்தாலும் தவறுதான்.. 

யாழ்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு சிங்கள மாணவனுக்கு எதிராக இருந்தாலும் தவறுதான்.. 

ஜெயபுர பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் மாணவனுக்கு எதிராக இருந்தாலும் தவறுதான்...


MS. Mohamed Azarudeen

No comments

Powered by Blogger.