Header Ads



பேராதனைப் பல்கலைக்கழகத்தை பார்வையிட விரும்புகிறீர்களா..?


யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அண்மையில் அறிவிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள மகாவம்சத்தின் (Great Chronicle) பழமையான ஓலையின் மூலப் பிரதியை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வாய்ப்பளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. .


பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, நாளை (1) திறந்த நாளாக பல்கலைக்கழகம் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், பல்கலைக்கழகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


“மகாவம்சம் ” பழங்கால ஓலையின் அசல் பிரதியை பொதுமக்கள் பார்வையிடும் ஒரு வாய்ப்பாக இது உள்ளது. . இது தவிர, பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர அருங்காட்சியகம், ஜோர்ஜ் கீட்டின் ஓவியங்களின் தொகுப்பு மற்றும் பல்கலைக்கழகத்தின் 5,000 அரிய புத்தகங்களின் தொகுப்பும் காட்சிக்கு வைக்கப்படும். ஒரு உள்ளூர் பல்கலைக்கழகம் திறந்த நாள் அறிவிப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்நிகழ்வு திறந்த நாளின் தொடக்க விழா நாளை (1) காலை 8.30 மணிக்கு கலை பீட கலையரங்கில் நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.