ரணிலின் அறிவிப்பினால் ஆத்திரம், முன்னாள் அமைச்சர்கள் ஏமாற்றம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சு பதவிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த அறிவிப்பிற்காக எஸ்.பி. திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, சனத் நிஷாந்த, காமினி லொக்குகே உள்ளிட்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்தின் உயர்மட்ட அலுவலகத்திற்கு தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, தற்போதைக்கு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாவிட்டாலும் அவர்களின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனவும் அரசாங்கத்திடம் இருந்து வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது அரசாங்கத்தின் நல்ல தொரு முன்மாதிரி.
ReplyDelete