Header Ads



இப்படியும் ஏமாற்றுகிறார்கள் - விழிப்பாக செயற்படுங்கள்


நிறுவனமொன்றின் பெயரை பயன்படுத்தி மட்டக்களப்பில் பெண்ணொருவரிடமிருந்து பணமோசடி செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


குறித்த பெண்ணிடமிருந்து சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் இவ்வாறு மோசடியாக பெறப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இவ்வாறான மோசடிகளில் ஏனையவர்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்ட நபர் இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.


அதன்படி இணையவழி மூலமான வேலைவாய்ப்பு தொடர்பில் குறுஞ்செய்தியொன்று அனுப்பி இதனை தொடர்ந்து வேலைக்கான ஆரம்ப கட்டணம் என தெரிவித்து சிறு தொகை அறவிடப்பட்டு இதனை தொடர்ந்து ஒன்றரை இலட்சம் ரூபா என்ற மிகப்பெரும் பணத்தொகையொன்றும் மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


குறுஞ்செய்தியால் பறிபோன ஒன்றரை இலட்சம் ரூபா பணம் - இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை | Money Fraud In Sri Lanka For Online Job


இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், மோசடியாளர்கள் பயன்படுத்திய வங்கிக்கணக்குகள் (Roy Mavin Nimesha Nilakshi - 200084804126 - 0754600730 - 15/2 Park Estate Kandapola Nuwara Eliya) உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.


அதன் மூலம் குறித்த நிறுவனத்தின் பெயரில் ஏதேனும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் வருமாயின் மிகவும் அவதானமாக செயற்படுமாறும், வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிருமாறு கோரப்படுமாயின் தயவு செய்து மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்து விட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.


இதேவேளை மோசடியாளர்களால் பயன்படுத்தப்பட்ட iContactLanka (Pvt) Ltd என்ற நிறுவன பெயர் தொடர்பில் நாம் ஆராய்ந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை எமது செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பில் வினவியிருந்தது.


இதன்போது குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில், தானும் தனது மனைவியும் இணைந்து இந்த நிறுவனத்தை கம்பஹாவில் நடத்தி வருவதாகவும், இந்த மோசடி விடயங்கள் தொடர்பில் தமக்கும் அழைப்புக்கள் கிடைத்ததாகவும், தமது நிறுவனத்தின் இலட்சினையை பயன்படுத்தி இந்த மோசடி கும்பல் செயற்பட்டு வருவதாகவும், எனினும் அவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கம் மற்றும் வங்கிக் கணக்கு இலக்கங்கள் என்பவற்றுக்கும் தமது நிறுவனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.


அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் பலர் தமக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் நிலையில் தாம் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


சமீபகாலமாக இணையத்தள தொழிநுட்பங்களை பயண்படுத்தி பல வகையிலும் மோசடிகள் இடம் பெற்று வருகின்றன. இந்த மோசடி கும்பல் போல பல கும்பல்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக அன்றாடம் வெளியாகும் செய்திகளின் மூலமாக நாம் அறிய முடிகிறது.


வெளிநாட்டு வேலைவாய்ப்பு, இணையத்தளம் வழியான வேலைவாய்ப்பு என்பவற்றை பெற்றுத் தருவதாக கூறியும் பல மோசடிகள் பதிவாகி வருகின்றன.


எனவே ஏதேனும் ஒரு முன் பின் அறியாத தரப்பிற்கு வேலை நிமித்தமோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ பணத்தினை வழங்கப் போகின்றீர்கள் என்றால் மிகவும் அவதானத்துடன் செயற்படுவது முக்கியமானது. குறிப்பாக வட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாக வரும் லிங்க்குகளை அழுத்துவதனால் பெறப்படும் வெகுமதிகள் தொடர்பிலும் எச்சரிக்கையாக செயற்படுவது கட்டாயமானது. 

No comments

Powered by Blogger.