Header Ads



மகிந்த மீது பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படக் கூடாது


போரை நிறைவுக்கு கொண்டு வந்த  மகிந்த ராஜபக்ச மீது பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படக்கூடாதென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


மிகிந்தலையில் இடம்பெற்ற கட்சி கூட்டமொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டங்களின் போது சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகளவான சொத்துக்களை சேகரிப்பதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.


அத்துடன், மகிந்த ராஜபக்ச விலையுயர்ந்த லம்போகினி மகிழுந்து மற்றும் தங்க குதிரைகளை வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.


அப்படியானால், குறித்த வாகனங்களும், தங்க குதிரைகளும் எங்கே எனவும் அவர் அதிகளவில் சேமித்ததாக கூறப்படும் சொத்துக்களும் எங்கே என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சாட்டியவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.


No comments

Powered by Blogger.