Header Ads



கடுமையாக சாடிய ஜனாதிபதி - தொல்பொருள் பணிப்பாளர் ராஜினாமா


தொல்பொருள் இடமொன்றுக்கு காணி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார்.


ஜனாதிபதி தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் “நீங்கள் எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறீர்களா?”


ஜனாதிபதி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.


குறித்த தொல்பொருள் இடத்திற்காக சுமார் 270 ஏக்கர் காணியை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவித்த போது, ​​அது மகா விகாரையை விட பெரியதா என ஜனாதிபதி அவரிடம் கேட்டுள்ளார்.


“உங்களுக்கு ஏன் 275 ஏக்கர் தேவை? இது மகாவிகாரையை விடப் பெரியதா? மகா விகாரை, ஜேதவனாராமயம் மற்றும் அபயகிரி மூன்றுமே 100 ஏக்கரை எடுக்காது,” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


2


ஜனாதிபதியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சில நாட்களுக்குப் பின்னர், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்ததாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.


“தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், கடிதத்தின் பிரதியும் எனக்குக் கிடைத்துள்ளது. பதவி விலகலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தொல்பொருள் இடமொன்றுக்கு காணிகளை வழங்குவது தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,பணிப்பாளர் நாயகத்தை கடுமையாக சாடியுள்ளார்.


ஜனாதிபதி அவரிடம் “நீங்கள் எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறீர்களா?” என ஜனாதிபதி இதன் போது அவரிடம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.