Header Ads



ஹஜ் பெருநாளன்று குர்ஆனை, எரித்தது யார் தெரியுமா..?


உலகம் முழுவதும்  ஹஜ் பெருநாள்  பண்டிகை கொண்டாடப்பட்டது. சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் மசூதியில் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 


அப்போது மசூதிக்கு வெளியே ஒரு போராட்டம் வெடித்தது. அங்கு சல்வான் மோமிகா(37) என்று ஈராக்கிய அகதி புனித குர்ஆனின் சில பக்கங்களை எரித்து உள்ளார். மேலும் புனித நூலை அவமதித்து உள்ளார்.


சல்வான் ஈராக்கில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனுக்கு தப்பிச் சென்று ஸ்டாக்ஹோம் கவுண்டியில் உள்ள சோடெர்டால்ஜியில் உள்ள ஜெர்னா நகராட்சியில் வசித்து வந்தார்.


போராட்டத்திற்கு முன் அவர் தனது சமூக வலைதளத்தில் எனது ஆர்ப்பாட்டம் ஹஜ் பெருநாள் அன்று நடைபெறும். எனது ஆர்ப்பாட்டம் ஸ்டாக்ஹோமில் உள்ள பெரிய மசூதிக்கு முன்னால் நடைபெறும். அங்கு நான் குர்ஆனை எரிப்பேன். ஸ்டாக்ஹோமில் வசிக்கும் எனது அன்புக்குரியவர்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று, நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பங்களிக்க விரும்புகிறேன் என அவர் கூறி இருந்தார்.


சல்வானின் ஆர்ப்பாட்டத்திற்கு புதன்கிழமை உள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஸ்டாக்ஹோமில் குரான் எரிப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது. 


ஸ்டாக்ஹோம் மசூதிக்கு வெளியே குர்ஆன் எரிப்பு ஆர்ப்பாட்டத்தை அங்கீகரிப்பதற்கான சுவீடன் அதிகாரிகளின் முடிவிற்கு துருக்கி கண்டனம் தெரிவித்து உள்ளது. துருக்கியின் வெளியுறவு மந்திரி இந்த போராட்டத்தை "கொடூரமான செயல்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

1 comment:

  1. அல்குர்ஆன் எரிக்கப்படுவதற்கோ அல்லது பயங்கரவாதத்தை தூண்டவோ இறக்கப்படவில்லை. அதனை இறக்கி வை்த்த அல்லாஹ் மனித இனம் இந்தப்பூமியில் முழுமையான மனிதனாக வாழ்ந்து அவனுக்கும் அவன் சார்ந்த சமூகத்துக்கும் பயனுள்ளவனாக வாழ்ந்து மறுமையில் அவன் நிம்மதியாக சுவனத்தை அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக இறைவனால் முழு மனித குலத்துக்கும் இறக்கி வைக்கப்பட்டது. அந்த அல்குர்ஆனின் சொந்தக்காரன் அல்லாஹ். அல்லாஹ் இறக்கி வைத்த அல்குர்ஆனை அதன் நோக்கத்தை விட்டு அதற்கு நேர்முரணாக அதைப் பாவித்தால் அதற்கு அல்குர்ஆனை இறக்கி வைத்த இறைவனுக்கும் அவனையும் மனித குலத்தையும் படைத்த இறைவனிடத்தில் அவன் பதில் கூறியாக வேண்டும். அல்குர்ஆனை தீயிலிட்டுக் கொளுத்தினால் அதற்கு சரியான வெகுமதி என்ன என்பது படைக்கப்பட்ட மனித குலத்துக்குத தெரியாது. அதன் உரிமையாளன் அதனைப் பார்த்துக் கொள்வான். அதே நேரம் இது போன்ற ஈனச் செயல்களைக் கண்டிப்பதும் முடியுமானால் தடை செய்வதும் மனிதகுலத்தின் கடமையாகும். அதைத்தான் துருக்கி அரசாங்கம ்செய்துள்ளது. அடுததவிடயங்களை அதை இறக்கிவைத்த ரப் பார்த்துக் கொள்வான்.

    ReplyDelete

Powered by Blogger.