Header Ads



வீழ்ச்சியை நோக்கி, இலங்கை ரூபா (முழு விபரம்)


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.


இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும்(14.06.2023) கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.


இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த  ஒரு மாதத்திற்கும் மேலாக  அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வந்தது.


எனினும், கடந்த வாரத்தில் இருந்து ரூபாவின் பெறுமதி   வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது.  அத்துடன் நேற்றும், இன்றும் ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்ற நிலையில் ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.


இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (14.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை   318.99 ரூபாவாகவும், கொள்வனவு விலை  303.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி     345.34 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி   325.784 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி   403.38 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி   381.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


டொலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்



1 comment:

  1. அரசாங்கத்தின் ஒரு பருப்பும் வேகாது. அடுத்த மாதம் இறுதியாகும் போது அமெரிக்க டொலரில் இலங்கை நாணயத்தின் பெறுமதி 350 ரூபாவுக்கு அண்மித்த அளவுக்கு மாறும், அதேபோல ஏனைய வௌிநாட்டு நாணயங்களின் பெறுமதியும் அதிகளவு உயர்ந்து இலங்கை ரூபா அதள பாதாளத்தில் சென்று சேற்றுக் குழியில் புதையுண்டு கிடக்கும். இது மாயாஜால வித்தையல்ல. பொருளாதார போக்கில் உள்ள யதார்த்தம்.

    ReplyDelete

Powered by Blogger.