Header Ads



பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா..?


புலிகளின் தலைவர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட வழங்கிய பதில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.


இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த சந்தர்ப்பத்தில் அனுபவம் மிக்க அரசியல்வாதியொருவர், சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என தெரிவித்தார் என்று மிலிந்த மொரகொடவை நோக்கி கூறப்பட்டது.


இதற்கு அவர் பதிலளிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று எனக்கு தெரியவில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன் 30 வருட யுத்தத்தில் நான் எனது நண்பர்களை பலரை இழந்துள்ளேன். எங்களைச் சுற்றி பல இறப்புக்கள் பதிவாகியிருந்தன.


இந்த நிலையில் நாம் கடந்த கால தவறுகளை செய்யக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 


1 comment:

  1. இறுதி யுத்தத்தில் தீவிரவாதி பிரபாகரன் இராணுவத்திடம் வெள்ளை கொடியோடு சரணடைய சென்று தலை சிதற சாகடிக்கபட்டான். இதுவே உண்மை வரலாறு.

    ReplyDelete

Powered by Blogger.