இலங்கையில் தமது அழகிய, விருந்தோம்பலை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி - (வீடியோ)
இலங்கையில் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்காக வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் அணியினர், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் அந்நாட்டு விசேட உணவு ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல வீரர்களான ரஷித் கான் மற்றும் யாமின் அஹ்மத்சாய் ஆகியோர் இந்த விசேட உணவை தயாரித்துள்ளனர்.
இதன்போது, இலங்கை அணித்தலைவர் தசுன் சானக மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
குறித்த உணவு "Shinwari Rosh" என்று அழைக்கப்படுகிறது.
இது குறித்த வீடியோ ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது.

Post a Comment