இறங்கி வந்தார் மைத்திரிபால
கடிதம் ஒன்றின் மூலம் அவர் இந்த தகவலை அறியப்படுத்தியுள்ளார்.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோருக்கு அவர் கடிதம் மூலம் இந்த விடயத்தை அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தின் அமைச்சு பதவிகளை ஏற்றமைக்காக அவர்களுக்கு எதிராக கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கும் கட்சியின் உறுப்புரிமையை நீக்குவதற்கும் முன்னதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
எனினும், அந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வழக்கொன்றை தொடர்ந்த நிலையில், குறித்த தீர்மானத்திற்கு நீதிமன்றினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. குறித்த உத்தரவிற்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இறுதியாக இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்திலும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன முற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது சரி, அந்த 10 கோடி ரூபாய்களை அந்த பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு கொடுத்து முடித்துவிட்டீரா, அல்லது அதற்கு ஒரு டீலை முடித்துவிட்டீரா, இரண்டாவது விடயம் தான் நிறையாக இருக்கின்றது. அது பற்றிய சத்தமே இல்லை. அப்பாவி ஒருவர் 7000ரூபாய்களை அரசாங்கத்துக்குச் செலுத்த தவறியதால் 8மாதங்கள் அநியாயமாக சிறையில் வாடினார். இவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி 10 கோடி ரூபாவைச் செலுத்த காலம் தவறியும் வம்பளந்து கொண்டிருக்கின்றார். அதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் வினவுகின்றனர்.
ReplyDelete