Header Ads



இலங்கை குரங்குகள், சீனாவுக்கு செல்வது நிறுத்தப்பட்டது


சீனாவுக்கு மீண்டும் குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.


சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்றைய தினம் (26.06.2023)மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உற்படுத்தப்பட்ட போதே இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


இதன் போது, வனஜீவராசிகள் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர ஜயசிங்க, சீனாவுக்கு மீண்டும் 100,000,000 குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக எடுக்கப்பட்ட தீர்மானம் இரத்து செய்யப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.


மேலும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் இந்த உறுதிமொழியை மனுதாரருக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதனை ஏற்றுக்கொண்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறித்த மனுவை ஜூலை 6-ம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.