பாத்ரூம் அருகில் மறைந்திருந்தவரால், துப்பாக்கி சூடு - பெண் உயிரிழப்பு
பொலன்னறுவையில் நேற்று (15.06.2023) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதிரிகிரிய - மிரிசேன கடற்றொழிலாளர் கிராமப் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 36 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தனது தாயாரின் வீட்டில் இருந்து தனது வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வீட்டின் மலசலகூடத்திற்கு அருகில் மறைந்திருந்த நபரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
அதன் பின்னர் குறித்த நபர் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த பெண் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நபருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தலைமறைவான சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment