Header Ads



சனத் நிஷாந்த கம்பி எண்ணுவாரா..?


நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை ஜூலை 13 ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த முறைப்பாடு இன்று (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் நீதிபதிகள் குழு முன்னிலையில் பரீசிலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, ​​பிரதிவாதியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.


இந்த வழக்கில் சாட்சியாக முன்வைக்கப்பட்டுள்ள சீ.டி.யினை பாிசோதித்ததிற்கு அமைய சாட்சியங்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் இந்த அழைப்பாணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.


அதன்படி, சம்பந்தப்பட்ட மனு ஜூலை மாதம் 13 ஆம் திகதி அழைக்கப்படும் என்றும், குறித்த அழைப்பாணை பிரதிவாதிகளுக்கு கிடைத்துள்ளதா? என அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சனத் நிஷாந்த, ஆர்ப்பாட்டகார்களுக்கு பிணை வழங்கும் போது நீதவான்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் கருத்து வௌியிட்டிருந்தாா்.


அந்த கருத்தின் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி சட்டத்தரணிகளான பிரியலால் சிறிசேன, விஜித குமார மற்றும் இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் ஆகியோரால் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.