வீழ்ந்தாரா ரணில்..? ஒதுக்கித்தள்ள தீர்மானித்ததா பொதுஜன பெரமுன..??
- Siva Ramasamy -
ரணிலை அரசியல் ரீதியாக ஒதுக்க தீர்மானித்துவிட்டது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன.
இன்று -12- ரணில் நடத்திய ஆளுங்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது பொதுஜன பெரமுன.
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இன்று பதவி விலகியமைக்கு, ரணிலின் கண்டிப்பான உத்தரவுகளே காரணமெனக் கூறி இனி பிக்குமார் ரணிலுக்கு எதிராக வீதிக்கு வரலாம்.
பொதுஜன பெரமுனவின் இளவயது எம்.பிக்கள் ரணிலின் பக்கம் இருப்பதாலும் ,அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க பெசில் உத்தேசிப்பதாலும் இப்போதே ரணிலுக்கு ஆப்பைச் சொருகத் தயாராகிறது பெரமுன.
ரணில் இந்தியாவில் மோடியை சந்திக்க செல்லும்போது , இங்கு அவர் அரசியல் ரீதியாக பலவீனமானவர் என்பதைக் காட்ட முயல்கிறது பொதுஜன பெரமுன…
இராமாயணப் போரிலும் – பாரதப்போரிலும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவென உயிர் கொடுத்த பாத்திரங்கள் இருவர் வருகிறார்கள்.. இராமாயணத்தில் இராவணனின் தம்பி கும்பகர்ணன்… மகா பாரதத்தில் துரியோதனனின் நண்பன் கர்ணன்.
இலங்கையின் பொருளாதாரப் போரில் ராஜபக்சக்களுக்கு கைகொடுக்கப் போய் , செஞ்சோற்று கடன் தீர்க்க முயன்று வஞ்சத்தில் வீழ்ந்திருக்கிறார் ரணில்..
பாவம்..!

இந்த பொதுஜன பெரமுனையின் பருப்பு ரணிலிடம் வேகாது. அனைத்துத் துரும்புகளும் தவறிவிட்டால் பொதுத் தேர்தலை அறிவித்துவிட்டு அவரின் வேலையைப் பார்க்க ரணிலிடம் இன்னும் அதிகாரம் இருக்கின்றது. அப்போது பொஹோட்டுவயின் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வந்தது யார் என்பதை இந்த நாட்டு மக்கள் மிகவும் சரியாக நிரூபிப்பார்கள். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete