Header Ads



விடுவிக்கப்பட்ட தமிழ் கைதிகளுக்கு உதவித் தொகை வழங்கிய லைகா


26 இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 லட்சம் உதவித்தொகை வழங்கியுள்ளார் லைகா குழும தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமாகிய சுபாஸ்கரன் . 


லைகா குழுமத்தின் நிறுவனரும், தலைவரும் லைகா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா ரூ. 25 லட்சத்தை விடுதலை செய்யப்பட்ட 26 தமிழ் அரசியல் கைதிகளுக்கு சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கியுள்ளார். 


பல்லாண்டுகாலமாக சிறையில் வாடிய கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் தலா ரூ. 25 லட்சத்தை தனது தாயார் திருமதி ஞானாம்பிகையின் பெயரில் இயங்கி வரும் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் மொத்தம் ஆறரை கோடி ரூபாய்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.