Header Ads



தேவாலயத்துக்குள் நுழைந்த இம்தியாஸ் கைது


கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்தியாஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று கடற்கரை பொலிஸார் தெரிவித்தார்.


மாத்தளை அகலவத்தையை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட மேற்படி சந்தேகநபர், மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் 46 வயதானவர் ஆவார.


  தேவாலயத்துக்குள் துதிப்பாடல்களை கேட்க வேண்டும் என்பதற்காக வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


 புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189வது வருடாந்த பெருவிழா இம்மாதம் 13ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதனை ஒட்டி தினமும் ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்படி, புதன்கிழமை (07) ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சந்தேகநபர் தேவாலயத்திற்குள் பிரவேசிக்க வந்த போது பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களினால் சந்தேகத்தின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 சந்தேக நபரிடம் இருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.