Header Ads



பரிதாபகரமான முறையில் சிறுவன் உயிரிழப்பு


முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் வீட்டின் இரும்புப் படலை, சிறுவன் மீது வீழ்ந்ததில் அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த மூன்று அகவை நிரம்பில ஆதவன் லிதுசிகன் என்ற சிறுவன் வீட்டு படலையில் விளையாடிக்கொண்டிருந்த வேளை கேற் (இரும்பு படலை) சிறுவன் மீது வீழ்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளான்.


சிறுவனின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் சிறுவனின் உயிரிழப்பு கேப்பாபிலவு கிராமத்தில் பெரும்சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.   

No comments

Powered by Blogger.