Header Ads



ஊஞ்சல் ஆடச்சென்ற சிறுமி மரணம் - தந்தை படுகாயம்


தங்காலை - நெடோல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த சிறுமியொருவர் வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவத்தில் நெவிந்தி யஹாரா தேவ்மினி என்ற 9 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த சிறுமி நேற்று காலை (18.06.2023) தனது தந்தையுடன் வீட்டில் உள்ள கொங்கிரீட் கம்பத்தில் ஊஞ்சல் ஆடச்சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தந்தை படுகாயமடைந்த நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் இளைய பிள்ளை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.