ராஜபக்சக்களை மக்கள் முன், கூண்டோடு தூக்கிலிட வேண்டும்
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"இறுதிப் யுத்தத்திற்கு தலைமை தாங்கியவன் என்ற ரீதியிலும், முன்னாள் இராணுவத் தளபதி என்ற ரீதியிலும் இதை வெளிப்படையாகக் கூற எனக்கு முழு உரிமை உண்டு.
யுத்த வெற்றி நாயகர்கள் எனும் மகுடத்தைச் சூடிக்கொள்ள ராஜபக்சக்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.
யுத்த வெற்றியின் பின்னர், ராஜபக்சக்கள் தங்கள் சுகபோக அரசியல் நலன்களுக்காக இந்த நாட்டின் வளங்களை விற்று அரச சொத்துக்களைக் கொள்ளையடித்து கடைசியில் இந்த நாட்டையே நாசமாக்கியவர்கள்.
இவர்களின் மோசமான செயல்களுக்கு மக்கள் அவர்களை கூண்டோடு அதிகாரத்திலிருந்து துரத்தியடித்தார்கள்.
இவை காணாது, நாட்டை விற்ற ராஜபக்சக்களைக் கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்.
நாட்டின் பெரும் குற்றவாளிகளான ராஜபக்சக்களைப் பாதுகாக்கவே தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.
தேர்தல்களை நடத்த பயப்படுகிறார், தேசிய ரீதியில் தேர்தல் ஒன்று நடந்தால் ஐக்கிய மக்கள் சக்தியே ஆட்சிக்கு வரும்.
அது ராஜபக்சக்களுக்கும் தனக்கும் பாதகமாக அமையும் என ரணில் எண்ணுகின்றார்." என பொன்சேகா கூறியுள்ளார்.
Post a Comment