இணை பிரியா தம்பதி, உலகை விட்டுச் சென்றது
இந்தநிலையில் மும்தாஜ் வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் 14-06-2023 மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மும்தாஜ்க்கு மருந்து வாங்க அப்துல் சலீம் தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று மதியம் பட்டுக்கோட்டைக்கு சென்றார். போகும் வழியில் அப்துல் சலீம் மயங்கி விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை மீட்டு தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அப்துல் சலீமின் உடலை முத்துப்பேட்டைக்கு கொண்டு வந்து அவரது வீட்டில் வைத்திருந்தனர்.
நோய்வாய்ப்பட்ட மனைவி மும்தாஜ் அருகில் உள்ள அவரது மகள் வீட்டில் இருந்தார். இவருக்கு அதர்ச்சி கொடுக்க கூடாது என்பதற்காக இவரிடம் குடும்பத்தினர் கணவர் இறந்த செய்தியை கூறாமல் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4 மணிநேரம் கழித்து இரவு மனைவி மும்தாஜும் திடீரென்று இறந்தார்.
ஏற்கனவே கணவர் இறந்த அதர்ச்சியில் இறந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்து இருந்த நிலையில் மனைவியும் திடீரென்று இறந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தநிலையில் கணவர் இறந்தது மனைவிக்கும் மனைவி இறந்தது கணவருக்கும் தெரியாமல் போன நிலையில், தம்பதி சாவிலும் இணைபி ரியாத இச்சம்பவம் முத்துப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment