Header Ads



காத்தான்குடி பள்ளிவாசலில் கிழக்கு ஆளுநர்


காத்தான்குடியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் சென்று தரிசித்ததுடன் தமிழ் மொழி, மொழி பெயர்ப்புடன் கூடிய அல் குர்ஆன் பிரதி பள்ளிவாயல் பிரதம கதீபினால் வழங்கி வைங்கப்பட்டது.


ஆளுநர் இறைவனின் அருளே இன்று (23) இப்பள்ளிவாயலை தரிசிக்க கிடைத்தமை எனவும் இதையொட்டி தான் மிகவும் சந்தோஷம் அடைவதாகவும் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகிகள்,கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர், பிரதேச செயலாளர், காத்தான்குடி நகரசபை செயலாளர், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பெருந்திரளான மக்கள் கலநது கொண்டதுடன் தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் கௌரவ ஆளுநருக்கு தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.