சர்வதேச Abacus போட்டியில், மாவனல்லை மாணவர்கள் சாதனை
மேற்படி சர்வதேச போட்டி நிகழ்ச்சிக்கு Abacus கற்பித்தலில் 18 வருடங்கள் அனுபவத்துடன் கேகாலை மாவட்டத்தின் Abacus மற்றும் அதன் கீழ் இயக்கிவரும் 10 கிளைகளின் பொறுப்பாளராகவும் செயற்பட்டு வரும் ஆசிரியை ஸீனியா தாஹிர் (Zeeniya Thahir) அவர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மாவனல்லையில் இயக்கிவரும் i Cam Abacus இன் 9 மாணவ, மாணவிகள் ஆசிரியையுடன் சர்வதேச Abacus போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்
அவர்களில் 6 வயதிற்கு உட்பட்ட போட்டியில் மாணவி F. ஸாரா ஸாதிக் Champion பட்டத்தினை வென்றுள்ளார்.
மேலும் ஸைய்த் இர்ஷாத் 7 வயதிற்கு உட்பட்ட போட்டியிலும்
அயானா அமீன் 7 வயதிற்கு உட்பட்ட போட்டியிலும்
உக்காஷா நளீர் 10 வயதிற்கு உட்பட்ட போட்டியிலும் Star Performance விருதினைப் பெற்றுக் கொண்டனர்.
அத்துடன் ஸைனப் ஹானி 9 வயதிற்கு உட்பட்ட போட்டியிலும், உமர் ஹிப்பதுல் கரீம் 8 வயதிற்கு உட்பட்ட போட்டியிலும்
யுஸ்ரா ஹைதர் அலி 6 வயதிற்கு உட்பட்ட போட்டியிலும், அஹமத் ஹகம் 8 வயதிற்கு உட்பட்ட போட்டியிலும்
உமர் பர்ஹான் 8 வயதிற்கு உட்பட்ட போட்டியிலும் Participants Award விருதினைப் பெற்றார்கள்.
Post a Comment