Header Ads



பாடசாலை, தனியார் பேருந்துகள் மோதல் - 6 பேர் காயம்


தியத்தலாவை பகுதியில், பாடசாலை பேருந்து ஒன்றும், தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில், 5 மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.


பொரலந்தையில் இருந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பண்டாரவளை நோக்கிப் பயணித்த பேருந்துடன், மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மோதியதில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இதன்போது, சிறு காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களும், பாடசாலை பேருந்தின் சாரதியும், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பில், தியத்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments

Powered by Blogger.