Header Ads



68 வயதுடைய வயோதிபர் வெட்டிப் படுகொலை


கம்பஹா பிரதேசத்தில் 68 வயதுடைய வயோதிபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்தச் கொலைச்சம்பவம் கம்பஹா, வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.


குறித்த வயோதிபரின் சடலம் அப்பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் இரத்த வெள்ளத்தில் இருந்த நிலையில் இன்று(14.06.2023) மீட்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் வெலிவேரிய பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொலைச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இதன் பிரகாரம் நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.twin

No comments

Powered by Blogger.