Header Ads



குவைத்தில் அதிக இரத்தம் வழங்கியவர்களின் வரிசையில் இலங்கையர்கள் சாதனை - 4 அமைப்புக்களுக்கு கௌரவம்


உலக இரத்த தான தினம் (World Blood Donation Day)அனைத்து மனிதர்களுக்கும் மிக முக்கியமான ஒரு நாள். இது ஆண்டுதோறும் ஜூன் 14  ஆம் தேதி உலக சுகாதார அமைப்பால் (WHO) நினைவு கூறப்படுகின்றது.


குவைத் மத்திய இரத்த வங்கி(Kuwait  Central Blood Bank) சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து ஜூன் 14 ஆம் தேதி  ரீஜென்சி ஹோட்டலில்(The Regency Hotel)ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.


இந்த மனிதாபிமான மற்றும் உயிர்காக்கும் நிகழ்வுகளுக்கு பங்களித்த குவைத் அமைப்புகள் மற்றும் வெளிநாட்டினர் அமைப்புகளை அவர்கள் அழைத்து கௌரவித்தனர்.


நன்கொடையாளர்களின் எண்ணிக்கையில் இலங்கை 4வது இடத்தைப் பெற முடிந்தது என்பதை நாங்கள் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.


இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த பின்வரும் நான்கு நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருந்தன. இது ஒரு சர்வதேச நிகழ்வாக இருப்பதால் ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் ஒரு உறுப்பினர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்.


1. சைலனீஸ் ஹெல்பிங் ஹேண்ட்ஸ் குவைத் (Saylaneese HelpingHandsKuwait(SHHK) டாக்டர் நவ்ரஸ் (குடும்ப மருத்துவ விஷேட நிபுணர்-ஆலோசகர் SHHK) அவர்கள்  பிரதிநிதித்துவப்படுத்தினார்.


2.இக்ரா இஸ்லாமிய சங்கம் (Iqra Islamic Committee)IIC -திரு மசூமி(Medical LaboratoryTechnologist)அவர்கள்  பிரதிநிதித்துவப்படுத்தினார்.


3.குவைத் அவசர உதவி மையம்,Kuwait Emergency Help Society(KEHS) -திரு ரினோஸ்(தலைவர்-KEHS)அவர்கள்  பிரதிநிதித்துவப்படுத்தினார்.


4.குவைத் யூனியன் ஆஃப் கன்றி ஹீரோஸ்(Kuwait Union of Country Heros)(KUCH)-திரு அமித்(தலைவர்-KUCH)அவர்கள்  பிரதிநிதித்துவப்படுத்தினார்.


மத்திய இரத்த வங்கியினால் எமது நாட்டிற்கு பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், குவைத்தில் வாழும் இலங்கையர்களின் ஆதரவிற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.


இது நமது நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் பெருந்தன்மைக்கும் எடுத்துக்காட்டு என்பது தெளிவாகின்றது.


இலங்கையர்கள் என்ற வகையில் இது சர்வதேச மட்டத்தில் எமது நாட்டிற்கும் புகழையும் மதிப்பையும் கொண்டு வருகின்றது.


குவைத்தில் உள்ள மேற்கூறிய நான்கு இலங்கை அமைப்புகளின் அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இனம் மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதகுலத்திற்கு அவர்கள் செய்த அபூர்வ சேவைக்காக நாங்கள் முழு மனதுடன் நன்றி கூறுகிறோம்.


தகவல்.

Mr S.M.Aroos 

தலைவர் 

Saylaneese Helping Hands Kuwait.



No comments

Powered by Blogger.