23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, உலக சாதனை படைத்த நோவக் ஜோகோவிச்
இறுதிப் போட்டியில் நான்காம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட்டை (Casper Ruud) ஜோகோவிச் தோற்கடித்தார். மூன்று செட்களிலும் 7-6 (7/1), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்:
இது ஜோகோவிச்சின் 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற உலக சாதனையை ஜோகோவிச் படைத்துள்ளார். போட்டிக்கு முன், ஜோகோவிச் மற்றும் ரஃபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் சமநிலையில் இருந்தனர்.
இருபத்தி நான்கு வயதான காஸ்பர் ரூட் தனது வாழ்க்கையில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் நோக்கத்துடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். ஆனால் அவர் மூன்றாவது முறையாக பட்டத்தை நழுவவிட்டார். ரூட் கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் மற்றும் யுஎஸ் ஓபனில் இறுதிப் போட்டியை எட்டினார், ஆனால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார்.
இதுவரை 70 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடியுள்ள 36 வயதான ஜோகோவிச், 34வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ஜே ர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை நேர் செட்களில் (6-3, 6-4, 6-0) தோற்கடித்து இரண்டாவது இறுதிப் போட்டிக்கு காஸ்பர் ரூட் தகுதி பெற்றார். ஜோகோவிச் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். s

Post a Comment