Header Ads



மண்டையை பிளக்கச்செய்யும் இஸ்ரேல் நாட்டு வெயில் - வெப்பக்காற்று வீசியதால் 220 இடங்களில் தீ

இஸ்ரேல் நாட்டில் வெயில் மண்டையை பிளக்கிறது. அங்கு மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியசை தாண்டியது. இது இஸ்ரேல் வரலாற்றில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்ப அளவாகும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மைய தரவுகள் கூறுகின்றன. 


இந்த வெப்பக்காற்று காரணமாக மின்துறையின் உள்கட்டமைப்பு சேதம், மின்சார தடைகள் போன்றவற்றை இஸ்ரேல் எதிர்கொண்டது. இதன் காரணமாக பல இடங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டன. எனவே இதன் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இஸ்ரேல் அரசாங்கம் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.


இதற்கிடையே வெப்ப அலை காரணமாக இஸ்ரேல் நாட்டில் சுமார் 220 திறந்தவெளி பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்தது.


இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. எனினும் தீயணைப்பு துறையினரின் துரிதமான நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.