Header Ads



11 சிறுவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த ஆட்டோவின் நிலை


யாழ்ப்பாணம், கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று கவிழந்து விபத்துக்குள்ளானதில், முன்பள்ளி சிறுவர்கள் 11 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


முச்சக்கரவண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இன்று (14) காலை முன்பள்ளிச் சிறுவர்களை அதிகளவில் ஏற்றிக் கொண்டு பயணித்த முச்சக்கரவண்டி கவிழ்ந்துள்ளது.


விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.