Header Ads



10 வயது மாணவனின் விபரீதமான முடிவு


பத்து வயதான மாணவன் ஒருவன், தன்னுடைய வீட்டின் மலசலக்கூடத்துக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.


ஓல்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 5இல் கல்விப்பயிலும் மாணவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே, மலசலக்கூடத்துக்குள் சென்று இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  


 மரணமடைந்த மாணவனின் பூதவுடல், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


ஹட்டன் நீதவான் ஸ்தல பரிசோதனைக்குப் பின்னர் மேலதி விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.


ரஞ்சித் ராஜபக்ஷ


No comments

Powered by Blogger.