Header Ads



முஸ்லிம்களுக்காக அக்கறையுடன் பணியாற்றிய, சமூகத்தின் புலமை சொத்து YLS ஹமீட் காலமானார்


முஸ்லிம் சட்டங்கள், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, பிராந்திய பிரச்சினைகள், முஸ்லிங்களினது உரிமைகள், நாட்டின் சட்டங்கள் தொடர்பிலும் பல்துறை சார்ந்த விடயங்களில் நிறைந்த அறிவை கொண்டிருந்த சட்டமுதுமானி YLS ஹமீட்  இன்று (25.05.2023) காலமானார். 


கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்றுவந்த நிலையிலையே அவர் இன்று காலை காலமானார். அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 7.30 மணியளவில் கொழும்பில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அடிக்கடி கட்டுரைகளை எழுதி அனுப்புவார். வட்சப்பில் பாசத்துடன் உரையாடுவார். அரசியலமைப்பு, மற்றும் சமூகம் சார்பிலான, முஸ்லிம் அரசியலவாதிகளின் கடமைகள் தொடர்பிலும் ஆக்கங்களை எழுதியவர்.


اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس!


No comments

Powered by Blogger.