Header Ads



முஸ்லிம் Mp க்கள் 6 பேரினால் புதிய அணி உருவாக்கம் - ஹக்கீம், றிசாத்திற்கு பின்னடைவா..??

இலங்கையில் முஸ்லிம் மக்களின் முக்கிய தலைமைகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரஷாட் பதியுதீன் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு புறம்பாக புதிய அணி ஒன்று உருவாகி வருகின்றது.


குறித்த இரு கட்சித் தலைமைகளின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அணியாக இணைந்து செயற்பட்டு வருகின்றமை பகிரங்கமாகியுள்ளது.


இலங்கை முஸ்லிம் மக்களின் தலைமைகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரஷாட் பதியுதீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் மீது அண்மைய காலங்களாக கட்சி உறுப்பினர்களே அதிருப்தி வெளியிட்டு வருகின்ற நிலையில், புதிய அணியொன்று உருவாகி வருகின்றமை பகிரங்கமாகியுள்ளது.


அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹுமான், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், பைசல் காசிம், முஷாரப், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவ்பிக், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகிய ஆறுபேரும் ஒன்றிணைந்து இரு பிரதான தலைமைகளையும் புறக்கணித்து செயற்பட்டு வருகின்றனர்.


வங்குரோத்து அரசியல் நோக்கத்திற்காக காலம் காலமாக முஸ்லிம்களின் பிரச்சினைகளை குறித்த மூத்த அரசியல் தலைமைகள் தீர்த்து வைக்காததால் இவ்வாறு தாம் செயற்படுவதாக குறித்த 06 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவிக்கின்றனர்.


இதன்படி ஒரு குழுவாக இயங்கி முஸ்லிம் சமூக பிரச்சினைகளை கட்டம் கட்டமாக தீர்ப்பதற்கு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்துள்ளார்.


கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் அரபுக்கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய இஷாக் ரஹுமான் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தினார்.


இந்த நிகழ்வில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் கலந்துக்கொண்டிருந்தார்.


இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தில் காலம் காலமாக தீர்த்து வைக்கப்படாத பிரச்சினைகள் பல இருந்துவருவதை சுட்டிக்காட்டி இந்த முடிவை எடுத்ததாக இங்கு உரையாற்றிய நடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


இதன்படி புதிதாக உருவாகியுள்ள குழு, சமூகத்தில் நிலவும் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வினைத் தேடி தொடர்ந்தும் இயங்கும் என அவர் தெரிவித்தார். ibc

No comments

Powered by Blogger.