Header Ads



நீதிமன்றத்தில் ரங்கா மீது CID சுமத்திய 3 குற்றச்சாட்டுக்கள், பிணையில் விடுதலையானாலும் விளக்கமறியல்


கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் எம்.பியான ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


ஸ்ரீ ரங்காவை .20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கோட்டை பதில் நீதவான் பண்டார இளங்கசிங்க, புதன்கிழமை (03) உத்தரவிட்டார்.


2022 ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியின் (அப்போதைய பிரதமர்) தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீரங்கா தீவிரமாகப் பங்கேற்றதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


பின்னர் சொத்துக்களை சேதப்படுத்துவதற்கு உதவியதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபராகப் பெயரிட்டிருந்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக ஜெ.ஸ்ரீ ரங்காவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்காவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தின சாட்சியாளர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.