Header Ads



கொரியா கனவு கலைந்தது - விமானத்தினால் ஏற்பட்ட பரிதாபம்


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொரியாவுக்கு புறப்பட வேண்டிய இலங்கை விமானம் பத்து மணி நேரம் தாமதமானதால் இலங்கையைச் சேர்ந்த 48 இளைஞர்கள் கொரிய வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


48 இளைஞர்களும் நேற்றிரவு கொரியாவுக்குச் செல்லவிருந்த நிலையில், இரவு 8:00 மணிக்கு அவர்கள் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட முடியவில்லை.


10 மணி நேரத்துக்குப் பிறகு இன்று காலை 6 மணிக்கு விமானம் கொரியாவுக்கு புறப்பட்டது. அந்த நிலைமையின் அடிப்படையில், கொரியாவில் இளைஞர்கள் குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என கொரியாவின் வெளிநாட்டு சேவை பணியகம் தெரிவித்துள்ளது.


10 மணி நேர தாமதம் காரணமாக அந்த இளைஞர்களை ஏற்க மறுப்பதாக கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கொரியாவுக்கு வந்த 48 இளைஞர்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

1 comment:

  1. இந்த கொரிய அதிகாரிகளின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அந்த இளைஞர்களின் குற்றமல்ல. அவர்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட தாமதம். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் குறிப்பாக அதற்குப் பொறுப்பான அமைச்சரும் சனாதிபதியும் தலையிட்டு அந்த இளைஞர்களின் தொழிலுக்கு உத்தரவாதமளித்து அவர்களை உடனடியாக தொழிலில் அமர்த்த அவசர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.