Header Ads



பெரும் மகிழ்ச்சியில் எமிரேட்ஸ் ஊழியர்கள் - அந்நிறுவனத்தின் அதிரடி போனஸ் அறிவிப்பு


கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் 24 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


துபாயை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த நிதியாண்டில் நான்கரை கோடி பேர் பயணித்துள்ளனர்.


இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு அந்நிறுவனம் 29 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளது.


எனவே வரலாறு காணாத உச்சத்தை கொண்டாடும் விதமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஐந்தரை மாத சம்பளத்தை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் போனஸாக வழங்க உள்ளமை ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. என் இதுபோன்று சிரிலங்கனை நிர்வகித்து நல்ல வருமானம் எடுக்க முடியாதா? அதற்கு அடிப்படைக்காரணம் நிர்வாகம் செய்பவர்கள் எத்தகைய நிர்வாக கல்வி அனுபமற்ற உலகப்புகழ்பெற்ற கள்வர்கள். இவர்கள் சிரிலங்கனை நிர்வகிக்கும் காலமெல்லாம் பொதுமக்கள் அவர்களுடைய நாளாந்த மூன்று நேர உணவை ஒரு நேரமாக்கி இரண்டு நேர உணவின் பெறுமதியை சிரிலங்கன் கள்வர்களைப் போசிக்க இந்த நாட்டின் 225 மில்லியன் மக்களும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். இது தான் சிரிலங்கன். உலகில் முதல் தரமான விமானக்கம்பனி!

    ReplyDelete

Powered by Blogger.