அடுத்த கட்டத்தை நோக்கி ரணில், கடுப்பில் நாமல், ஹிருணிக்காவை கானோம்
SLPPயில் இருந்த இந்த இளைஞர்கள், முன்பு மஹிந்த கட்டுப்பாட்டில் தேசிய உடை போட்டவர்கள்.
இப்போ ரணில் கட்டுப்பாட்டில் கோர்ட் சூட் போடுகிறார்கள். இங்கிலிஷ் பேசும் சர்வதேச பாடசாலையில் படித்த இவர்கள் சுலபமாக ரணிலுடன் ஒட்டிக்கொண்டார்கள்.
இதில் இன்று ரொம்ப கடுப்பு, நாமல் ராஜபக்சவுக்குதான். ஏனெனில் இவர்களெல்லாம், முன்பு நாமலின் நண்பர்கள்.
ரணில் தனது ஜனாதிபதி தேர்தல் வியூகங்களை ஆரம்பித்து விட்டார்.
"ரணில் ராஜபக்ச" என கிறுக்குதனமாக கூச்சல் போட்ட ஹிரூனிகாவே துண்டை துணியை காணோம் என மூலைமுடுக்கில் கப்சீப்பாக ஒளிந்து இருக்கிறார்.
இவ்வளவு ஆகியும், நம்ம தமிழ் எம்பீக்கள் உட்பட பலர், ரணில், ராஜபக்சர்களை காப்பாற்றத்தான் பிரதமர், ஜனாதிபதி பதவிகரை ஏற்றார் என்ற பழைய பல்லவியையே பாடுகிறார்கள்.
நான்தான் எப்போதும் ஒன்றை திரும்ப, திரும்ப சொன்னேன். "ரணில் யாரையும் காக்க போகவில்லை. அவர் தன்னை தானே காப்பாற்றிக்கொள்ளத்தான் போனார்" என்றேன்.
2005ம் வருடம் சதி காரணமாக பறிபோன ஜனாதிபதி பதவியை, ரணில் தேடிப்பெற்றார்.
சதி செய்த மஹிந்தவே அதை ரணிக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்தது, காலத்தின் விளையாட்டு.
இப்போ அடுத்த கட்டத்தை நோக்கி ரணில் நகர்கிறார்.
ஆகவே, ரணிலை எதிர்ப்பதானால் அவரை "ரணில் விக்கிரமசிங்க"வாகவே நினைத்து எதிர்க்க வேண்டும், என சஜித்துக்கு நான் கூறியுள்ளேன்.
- மனோ கணேசன் Mp -
Post a Comment