Header Ads



மகிந்த, கோத்தா, நாமல் மனதில் இப்போது சூறாவளி அடித்திருக்குமா..? வைபத்திற்கு சென்ற மனோவுக்கு வந்த சந்தேகம்



பிரிட்டிஷ் தூதரகம், தங்கள் மன்னர் சார்ல்ஸ் முடிசூட்டு தொடர்பு நிகழ்ச்சியை கொழும்பில் வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நிகழ்த்தியது. 


நீண்ட நேர விருந்து நிகழ்வு. பிரமாண்ட திரையில் லண்டன் நேரலை காட்சிகளை காட்டி குதூகலம். 


அழைப்பை ஏற்று சென்று ஒரு அரை மணி மட்டும் இருந்து, தூதுவர் சாரா ஹல்டனிடம் கைகுலுக்கி பேசி விட்டு திரும்பி வந்தேன். துணை தூதுவரும், சில பிரிட்டிஷ் தூதக அதிகாரிகளும் பேசினார்கள். 

   

இந்த கொழும்பு நிகழ்ச்சியில், நிறைய வெளிநாட்டு தூதுவர்கள் பட்டாளம். 


பல இலங்கை அரசியலர்கள், மகிந்த யாபா, நிமல் சிறிபால, மனோ கணேசன், லக்ஸ்மன் கிரியல்ல, அலி சப்ரி, விதுர விக்கிரமநாயக்க, ரொசான் ரணசிங்க, எரான் விக்கிரமரத்ன, ராஜகருணா,  சந்திரிக்கா, கருஜயசூரிய. நான் திரும்பிய பிறகு வந்தவர்களை எனக்கு தெரியாது.    


லண்டனில் நடக்கும் பிரமாண்ட முடி சூட்டுக்கு சுமார் ஏழு நாடுகளை தவிர, அனைத்து நாட்டு தலைகளும் அழைக்கப்பட்டு பலரும் கலந்துக்கொண்டுள்ளார்கள். திரையில் “கலர்புல்லாக” தெரிகிறது.   


நம் நாட்டில் பதவி மாற்றங்கள் நிகழ்ந்திராவிட்டால், அங்கே கோதாபயத்தான் போயிருப்பார். 


அவர் போகாட்டி, மகிந்த. இவர் போயிருந்தால், கூடவே நம்ம இளவரசர் நாமலையும் கூட்டி போயிருப்பார். 


இன்று, கிளர்ச்சி நிகழ்ந்து சொந்த மக்களாலேயே விரட்டப்பட்டு, இவர்கள் வீடுகளில் வெதும்பி கொண்டு இருப்பார்கள். லண்டன் காட்சிகளை பார்த்தால் மன அழுத்தம்தான் மிஞ்சும். இதன் பெயர்தான் நம்ம “கர்மா”. 


இவர்கள் எவரும் கொழும்பு நிகழ்வுக்கு நான் இருக்கும்வரை வரலை. ஒருவேளை இவர்கள் நான் திரும்பிய பிறகு வந்திருந்தாலும் மனதில் சூறாவளி அடித்திருக்கும். 


அதிலும் இவர்கள் தேர்தலில் மண்கவ்வ செய்த ரணில் கோர்ட் சூட்டில் அங்கே கிங் சார்ல்ஸ்க்கும், பமிலாவுக்கும் கைகொடுத்து நிற்கிறார். இது டபுள் “கர்மா”..!  


மனோ கணேசன்

No comments

Powered by Blogger.