Header Ads



நான் எந்தத் தவறும் செய்யவில்லை, பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதும் ஜெரோம் வரவில்லை


தனது வார்த்தைகள் எந்த வகையிலும் தங்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அனைத்து பௌத்த பிக்குகள், பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ ஒரு நேரடி நிகழ்ச்சியில் வீடியோவினூடாக கூறினார்.


“நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும், எனது வார்த்தைகள் உங்களை எந்த வகையிலும் மனரீதியாக புண்படுத்தியிருந்தால், எனது பௌத்த சகோதரர்கள், இந்து சகோதரர்கள், முஸ்லீம் சகோதர சகோதரிகள் ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்,” என்றார். 


மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து மதங்களுக்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்த முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், போதகர் ​ஜெரோம் பெர்ணான்டோவை கைது செய்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன், கட்டுநாயக்கவில் உள்ள அவருடைய மிரகல் டோம் மண்டபத்தின் முன்பாகவும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருந்த நிலையில், சிங்கபூருக்கு சென்றிருந்த அவர், இலங்கைக்கு இன்று (21) திரும்புவதாக அறிவித்திருந்தார். எனினும் இதுவரையிலும் அவர் நாடு திரும்பவில்லை. தன்னுடைய நிகழ்ச்சி நி​ரலின் பிரகாரமே வெளிநாட்டுக்குச் சென்றிருந்ததாக அன்றையதினம் பதிவொன்றை இட்டிருந்தார்.


இந்நிலையில், கட்டுநாயக்க மிரகல் டோம் மண்டபத்தில் ஞாயிறு ஆராதனை இடம்பெறாது என தன்னுடைய சமூக வலைத்தளத்தில் போதகர் ஜெரோம் பதிவொன்றை இட்டுள்ளார்.


எனினும், இன்றைய ஆராதனை மிரிஹானையில் இடம்பெறும் என்றும், அதற்காக சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக தொடர்பில் இருக்குமாறும் அவர், அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.   


பௌத்த மதகுருமார்கள், பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தியிருந்தால் அவர்களிடம் தான் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.